ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் நாளை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நாளை மதியம் 2 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் மத்திய செயற்குழு இந்த கூட்டத்தில் இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

இதனை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட்ட சில உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனிடையே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, லசந்த அழகியவண்ண உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.