ஸ்ரீ.சு.கட்சியின் மேலும் 04 பேர் அரசுக்கு செல்ல கோரிக்கை – ரவிக்கும் அமைச்சுப் பதவி..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசிற்கு ஆதரவு வழங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் புதிய அமைச்சரவைக் குழுவில் ரவி கருணாநாயக்கவுக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சுப் பதவி வழங்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.