தீர்மானமிக்க முடிவினை முன்வைக்க ஸ்ரீ.சு.கட்சியின் 12 அமைச்சர்கள் ஜனாதிபதியினை சந்திக்கின்றனர்…

அமைச்சுப் பதவியினை விட்டும் எதிர்க்கட்சியில் அமர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 12 பேர் தீர்மானித்திருப்பதாகவும், குறித்த தீர்மானத்தினை இன்று(06) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி அமைச்சர் அருந்திக பிரனாந்து இது குறித்து தெரிவிக்கையில்;

குறித்த ஜனதிபதியுடனான சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலை மற்றும் பதவி விலகல் குறித்து விரிவாக எடுத்தியம்ப உள்ளதாகவும், ஆட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமரும் எமது முடிவில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை எனவும் தெரிவிக்க உள்ளதாகவும், மேலும் எதிர்கட்சியில் அமர்ந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலக மாட்டோம் எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)