ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களது அணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக தமிழ் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட குழுவினரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.