கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்வரும் தேர்தலுக்கு முகங்கொடுக்கும் விதம் குறித்து ஆராயும் விசேட சந்திப்பு ஒன்று அரசினை பிரதிபலிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இடையில் நேற்று(15) இரவு இடம்பெற்றுள்ளது.
அவ்வாறே, எதிர்கட்சியில் அமர்ந்துள்ள ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இன்று(16) கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும், கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா குறித்து தீர்மானிக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை(17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூடவுள்ளதாக கட்சியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
#rishma