நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரடங்கிய அணி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நாளை மறுதினம் (13) சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்து கொண்டனர்.
அதன் பின்னர், 16 பேரைக் கொண்ட அவ்வணி, பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடின.
அதன் ஒரு கட்டமாகவே, கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.