ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையில் இன்று(18) இடம்பெறவிருந்த கலந்துரையாடல் இம்மாதம் 22ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டமைப்புத் தொடர்பிலேயே குறித்த இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது.
குறித்த கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான அடிப்படைக் காரணங்கள் குறித்து கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான பிரதான கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.