ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொ. முன்னணிக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு (UPDATE)

(FASTNEWS|COLOMBO)- புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று(17) எதிர்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவிருந்த நிலையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூட்டமானது, ஜூன் 26ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

———————————————–(UPDATE)

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொ. முன்னணிக்கிடையிலான கலந்துரையாடல் இன்று

(FASTNEWS|COLOMBO)- புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுக்கிடையேயான 6 ஆம் கட்ட கலந்துரையாடல் இன்று(17) எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களின் போது இரண்டு கட்சிகளும் செயற்படக் கூடிய விதம் தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.