நம்பிக்கையில்லா பிரேரணையினை தோற்கடிக்க வாக்களிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 05 கோடி ரூபா வழங்குவதாக பேரம் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் ப்ளோட் ஆகிய கட்சிகளையும் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏலவே வாக்களிப்பதை தவிர்ப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது 11 உறுப்பினராக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 05 பேருக்கு வாக்களிப்பதை தவிர்க்க தலா 08 கோடி ரூபா வீதம் வழங்க உடன்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதன்படி, கேகாலை, காலி உள்ளிட்ட பிரதேசங்களின் ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐவர் பராளுமன்றிற்கு வருகை தருவதனையும் தவிர்த்துள்ளதாக தெரிய வருகின்றது.