ஸ்ரீ லங்கன் சேவையின் முன்னாள் தலைவரிடமும் ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக அதன் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோரை எதிர்வரும் 26ஆம் திகதியன்று, பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.