(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜப்பானில் வீசிய புயல் காரணமாக நரிடா சர்வதேச விமான நிலையத்துக்கான ஸ்ரீ லங்கன் விமான சேவை இன்றும்(14) இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான்-நரிடா நோக்கி புறப்படவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 460 விமானமே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை 109411 777 19 79 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு நரிடா சர்வதேச விமான நிலையத்ததை நோக்கிச் செல்லவிருந்த யு.எல் 460 விமானம் இன்று அதிகாலை 2.35 மணிக்கு புறப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.