ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் Terminal பகுதியிலும் அதனையடுத்துள்ள பிரிவிலும் திருத்தப்பணி இடம்பெறுகிறது.

இதன் காரணமாக விமானப்பயணிகளுக்கு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

விமானப் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் நாளை முதல் பயணம் செய்யவுள்ள விமானம் புறப்படும் குறித்த நேரத்திற்கு முன்னதாக 4 மணித்தியாளங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவித்துள்ளது.

சீர் செய்யும் பணியின் காரணமாக ஏற்படும் கால தாமதத்தை குறைக்துக்கொள்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.