ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்களை வழிநடாத்தும் பொறுப்புக்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று(05) அறிவித்தார். கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
துறைமுக தொழிற்சங்கத்துக்கு டிலான் பெரேரா, கல்வி தொழிற்சங்கத்துக்கு லசந்த அழகியவண்ண, தோட்ட தொழிற்சங்கத்திற்கு எஸ்.பீ. திஸாநாயக்க, பெற்றோலிய தொழிற்சங்க அனுராதா ஜயரத்ன, திவிநெகும மற்றும் பொருளாதார பிரிவு தொழிற்சங்கத்திற்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்திற்கு தயாசிறி ஜயசேகர, விவசாரய அமைப்பு தொழிற்சங்கத்திற்கு விஜயமுனி சொய்ஷா, மின்சக்தி தொழிற்சங்கத்திற்கு பிரியங்கர ஜயரத்ன, சுகாதார தொழிற்சங்கத்திற்கு சுதர்ஷனி பிரணாந்து புள்ளே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.