ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும் மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் நேற்று(22) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாண சபை அமைச்சர் சரத் இலங்கசிங்கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாண சபை அமைச்சர் சுசில் குணரத்னவும் இவ்வாறு ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

 

(rizmira)