ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இரண்டு பேர் நேற்று(12) முதல் நீக்கப்பட்டுள்ளனர்
நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து குமார வெல்கம ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி அவ் வெற்றிடங்களுக்கு நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராக, மத்திய மாகாண சபை உறுப்பினர் எச். ஏ. ரணசிங்க , மத்துகம தொகுதி அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமித்ர அபயவீர நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில தொகுதி அமைப்பாளர்கள் நேற்று(12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.