வேட்பு மனுத் தாக்கலுக்கான இரண்டாம் கட்ட நடவடிக்கையிலும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்காக மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நேற்று(21) நிறைவுக்கு வந்த இரண்டாம் கட்ட வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்கள் 248இற்கான வேட்புமனுக்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
முதலாம் கட்ட வேட்புமனு கோரலில் உள்ளூராட்சி மன்றங்கள் 93 இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 6 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில்; மேற்குறித்த இரண்டு கட்டங்களிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்புமனுக்களே அதிகளவு நிராகரிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட வேட்புமனுத் தாக்கலின் போது நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
#reeshma..