ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை(03) இடம்பெறவுள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யபட்டுள்ளமை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுதல், முன்னாள் ஜனாதிபதியால் ஒன்றிணைந்த எதிரணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட காரணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, குறித்த இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
குறித்த இந்த விடயம், குறித்து கட்சிச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.