பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது அடுத்த படமான நீராலியில் டூயட் பாடல் ஒன்றை, மெல்லிய குரலில் ரசிகர்களை கவர்ந்து வரும் ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து இப்பாடலில் பாட உள்ளார்.
நீராலி படத்தில் அரியவகை கற்களை கண்டுபிடிக்கும் அறிவியலாளராக மோகன்லால் நடித்து வருகிறார். இதுவரை மோகன்லால் 45 பாடல்களைப் பாடியுள்ளார்.
கடைசியாக, புலிமுருகன் திரைப்படத்தில் ‘மலையாட்டூர் மலையும் கயாரி’ என்ற பாடலை மோகன்லால் பாடியிருந்தார். அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் படத்தின் புரமோஷனுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.