ஹகீம் இன்று பாராளுமன்றில் விசேட உரை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தான் மற்றும் சஹ்ரான் இடையே இல்லாதவொரு தொடர்பொன்றினை முடிச்சுப் போட்டு அதனை பரப்பி தனது அரசியல் வாழ்க்கையினை சீர்குலைக்க சிலர் சூழ்ச்சி செய்வதாகவும் அது தொடர்பில்  இன்று(23)பாராளுமன்றில் உரையாற்ற உள்ளதாகவும், மக்கள் அறியாத ஏராளமான விடயங்கள் இதன்போது வெளிச்சத்திற்கு வரும் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹகீம் மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்து தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தவுடன் சஹ்ரான் தொடர்பில் என்னுடன் சேர்த்து இல்லாதவொன்றினை கோர்த்து விட்டதாகவும் மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ரவுப் ஹகீம் நேற்று(22) மாலை மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து தெரிவித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலையடுத்து காத்தான்குடியில் ஏற்பட்ட குழப்பகார சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும், சேதமாக்கப்பட்ட இடங்களையும் நான் பார்வையிடச் சென்றிருந்தேன். அப்போது மக்களோடு மக்களாகவிருந்த ஸஹ்ரான் மற்றும் அவனது சகோதரனை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்கள் யாரென்ற விடயம் நான் உட்பட யாருக்கும் தெரியாது. அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு குறுகிய நோக்கத்தில் சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.