அவிசாவளை கொழும்பு பிரதான வீதியின் ஹங்வெல்ல பகுதியில் இன்று(05) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதுண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.