ஹஜ் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சி அன்மையில் மாவனல்லை இஷ்டா நிறுவன மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாராவை இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விளையாட்டு நிகழ்ச்சியில் வீதியோட்டம், பலூன் உடைத்தல், தேசிக்காய் கரண்டி ஓட்டம், சாக்கோட்டம், யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல் என பல போட்டி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசில்களும், புத்தக பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் காலை 7 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மாவனல்லை JM MEDIA நிறுவனம் ஊடக அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ராஷித் மல்ஹர்டீன்)




