ஹட்டன் – கண்டி வரையான பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS|COLOMBO) ஹட்டன் தொடக்கம் கண்டி வரை பயணிக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கான பேரூந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீதியில் பயணிக்கும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேரூந்துகளை நாவலப்பிட்டி பொது பேரூந்து தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து ஹட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி பொது பேரூந்து தரிப்பு நிலையத்தின் ஊடாக கண்டிக்கு பயணிக்கும் தனியார்துறை பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் அரச போக்குவரத்து பேரூந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பை ஹட்டன் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் மையமாக வைத்து ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஹட்டன் தொடக்கம் கினிகத்தேனை, நாவலப்பிட்டி ஆகிய வழியாக கண்டிக்கு செல்லும் தனியார் போக்குவரத்து சபைக்கான பேரூந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கான பேரூந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளது.