(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹட்டன் நகரத்தில் டன்பார் வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்றிரவு(03) ஏற்பட்ட தீயினால் குறித்த நிலையம் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இத் தீவிபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், விற்பனை நிலையத்தில் இருந்த புடவைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.