ஹதுருசிங்கவுக்கு எமனாகும் ஹரீன்

(FASTGOSSIP | COLOMBO) – எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள நியுசிலாந்துடனான தொடர் முடிவடையும் வரையில் இலங்கை அணியின் பயிற்சியாளர்களை மாற்றவேண்டாம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை உறுதி செய்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக்க ஹதுருசிங்கவை நியூசிலாந்து தொடருக்கு பின்னர் எப்படி நீக்கப்போகின்றீர்கள், இவருக்கு பதில் புதிதாக யாரை நியமிக்கப்போகின்றனர் என்பதை 24 மணி நேரத்தில் எழுதி தாருங்கள் என கோரியுள்ளார்.

அமைச்சரின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து பயிற்சியாளர் மாற்றம் தொடர்பான குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.