(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராக ஊடகங்கள் விமர்சித்து வரும் சந்திக்க ஹதுருசிங்கவை பதவியில் இருந்து விலக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் போட்டிகளுக்கு பின்னர் ஹதுருசிங்கவை விலக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு ஹதுருசிங்கவை நீக்கி இலங்கை அணியின் பயிற்சியாளராக அவுஸ்திரேலிய இன பயிற்சியாளரான ஸ்டீவ் ரிக்சனை நியமிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.