(FASTNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, தென்னாப்பிரிக்காவில் இருந்து நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீளவும் பங்களாதேஷ் அணியுடன் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது.
ஹத்துருசிங்க நாடு திரும்பியதும், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணியை முன்னகர்த்துவதற்கான அவரது திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கோரப்படவுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியை வெற்றிகரமான அணியை மாற்றியதை அடுத்து அவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.
எனினும் அவரது நியமனத்தின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவை சந்தித்ததுடன், 2020ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு – 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கு போட்டியின்றி தெரிவாகும் வாய்ப்பையும் இழந்தது.
அதேநேரம் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கட் தொடர் ஒன்றை வென்ற முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையையும் இலங்கை அவரது பயிற்றுவிப்பின் கீழ் பெற்றுக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.