ஹபராதுவ வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்…

(FASTNEWS|COLOMBO) ஹபராதுவ – கினிகல வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(19) அதிகாலை தீ பரவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிசார் மற்றும் காலி தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் பிரதேச மக்களின் உதவியுடன் தீயணைப்பினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீரபரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் ஹபராத்துவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.