ஹபீஸிற்கு தடை விதிக்குமா ஐ.சி.சி.

பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவர் முகமது ஹபீஸ். இவரது பந்துவீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

ஐ.சி.சி. நிர்ணயித்த விதிமுறைக்கு மாறாக அவரது பந்து வீச்சு சட்ட விரோதமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த பரிசோதனையில் ஹபீஸ் சரியான முறையில் வீசி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் முகமது ஹபீஸ் பந்து வீச்சு குறித்து மீண்டும் நடுவரால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக காலி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் தான் அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டெஸ்டில் ஹபீஸ் 20 ஓவர் வீசி 2 விக்கெட் கைப்பற்றினார்.

ஒரே ஆண்டுக்குள் ஹபீஸ் மீது இதே மாதிரியான புகார் 2–வது முறையாக கூறப்படுவதால் அவருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.