ஹம்பாந்தோட்டை துறைமுகமானது பொதுமக்களது சொத்தாக இருக்கையில் அதனை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்வது முற்றிலும் பிழையான நடவடிக்கை எனவும் அதனை மீளவும் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கிய பின்னரே அடுத்த கை பார்ப்பது என நீதி மற்றும் பெளத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தமானது உலக அரசியலின் ஒரு திருப்புமுனை என சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தியா திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை கோருகின்றமையினையும் இதன்போது நினைவு கோர்ந்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் நூற்றுக்கு 89 ஆனவை திருப்பி ஏற்றுமதி செய்யும் கப்பல்கள் எனவும், ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் பின்னர் கடல் மைல்கல் 400 இணையும் தாண்டி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தருவதில்லை எனவும், இதனால் சீன நிறுவனம் கொழும்பு துறைமுகத்தினை நீச்சல் குளமாக கருதுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
ஊழலுக்கு எதிராக போராடுவதில் தனது நிலைப்பாடு மாறப்போவதில்லை, அரசில் இருப்பதா இல்லையா என தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
(rizmira)