அரச மற்றும் தனியார் கூட்டிணைப்புடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முதற்கட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்துகத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையினுடாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் – சீன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற ‘சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்’ நிறுவனத்துக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளின் பின்னர் இது தொடர்பான் இருதரப்பினருக்கிடையே இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.