ஊடகவியலாளர் தாக்குதல் – அரசாங்கம் முழுமையான விசாரணை ஆரம்பம்..

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற குழப்பநிலையின் போது, ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையிடலின் போது பின்பற்றப்படும் ஒழுங்கு முறைகளை குறித்த ஊடகவியலாளர் மீறியமையே இச்சம்பவம் இடம்பெறுவதற்கான அடிப்படை என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக பாதுகாப்பு சட்டத்தின்படி, இவ்வாறான பிரச்சினைகளில் கடற்படைத் தளபதியின் தனிப்பட்ட தலையீடு அவசியம் என கடற்படை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.