ஹம்பாந்தோட்டை பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 80 பேர் காயம்…

ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பகுதியில் நேற்று(12) இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெல்லவாய பிரதான வீதியில், மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றும் தெஹியத்த கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு பேரூந்துகளிலும் பயணித்த 80 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், இவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.