ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் நகராதிபதியாக எராஜ் பெர்னாண்டோ…

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருந்த குறித்த சபையை, பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எராஜ் பெர்ணாந்தோ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.