ஹம்பாந்தோட்டை விவகாரம் – பாதுகாப்பு செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு..

ஹம்பாந்தோட்டை சம்பவம் தொடர்பில் கடற்படைத்தளபதி வைஸ் அடமிரல் ரவீந்திர விஜேகுணவர்தன பாதுகாப்பு செயலாளருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி நேற்றைய தினம் விரிவான அறிக்கை ஒன்றை ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை ஆராய்ந்து பொருத்தமான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய செய்தியாளர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் அது தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகள் உட்பட சம்பவம் குறித்த 30 அறிக்கை ஒன்றையும் கடற்படைத் தளபதி சமர்ப்பித்துள்ளார்.