ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில் மேலும் சிலர் கைது..

ஹம்பாந்தோட்டை சீன – இலங்கை கைத்தொழில் வலயத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற தினத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அதிகாரியொருவரே இதனைத் தெரிவித்துள்ளார்.

அம்பலந்தொட்ட மற்றும் வீரக்கெட்டிய காவற்துறை ஊடாக நேற்று(15) இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற மறுநாள் கைது செய்யப்பட்டுள்ள 51 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.