ஹம்பாந்தோட்டை விவகாரம் – நாடாளுமன்றில் அமைதியின்மையால் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு..

ஹம்பாந்தோட்டை போராட்டத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இன்று(09) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

இதன்போது நாடாளுமன்றத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

தினேஸ் குணவர்த்தனவின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்ப்புகள் ஏதும் இருக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைக்குமாறு குறிப்பிட்டார்.

அவ்வாறு யோசனை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை கவனத்தில் கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகி சுமார் ஒரு மணித்தியாலத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.