ஹம்பாந்.துறைமுக விற்பனை குறித்த பிரதமரின் உடன்படிக்கையினை அம்பலப்படுத்துமாறு ஜேவிபி கோரிக்கை.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“எதிர்வரும் ஜனவரி 07ம் திகதி ஹம்பாந்தோட்டை

துறைமுகத்தின் உரிமையானது 99வருடங்களுக்கு சீன நிறுவனமொன்றிற்கு வழங்கவுள்ளதாகவும் அதன் உடன்படிக்கையில் பிரதமர் கையெழுத்திடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுமக்களின் நலன் கருதி இவ்வாறான சொத்துக்களை விற்க முயல்வது குறித்து மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் நாம் அதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது நாட்டின் பொருளாதாரம் மற்றுமின்றி நாட்டின் பாதுகாப்பிற்கும் பெரும் சவாலாகவே அமையும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

மேலும், குறித்த கைச்சாத்து தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு தீர்வொன்றினை வழங்க வேண்டும்”

என்ற பிரதான கருத்துக்களை முன்வைத்து குறித்த கடிதம் வரையப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கடிதமானது;

Displaying Page-1.jpg

Displaying Page-2.jpg