ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகத்தடை

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பகுதியில் இன்று காலை பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. எனினும் மரத்தை வெட்டி அகற்றுவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து தடைப்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.