‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 4-வது தென்னாபிரிக்க வீரராக இம்ரான் தாஹிர் சாதனை…

சிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 120 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாம்வே அணி 73 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் தென்னாபிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாஹிர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு லாங்வெல்ட் (2005), டுமினி, ரபடா (2015) ஆகியோர் ஹாட்ரிக் சாதனை புரிந்து இருந்தனர்.இந்த ஆட்டத்தில் இம்ரான் தாகீர் 24 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார்.