ஹார்வி புயலால் இரசாயன தொழிற்சாலை வெடிக்கும் நிலையில்.. – பொதுமக்கள் வெளியேற்றம்..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கி வரும் ஹார்வி புயல் காரணமான அங்குள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்று வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவசரமாக அவ்விடத்தினை விட்டும் வெளியேற்றப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹூஸ்டனின் அருகே உள்ள க்ராஸ்பை என்ற இடத்தில் உள்ள இரசாயனப் பொருட்களை தயாரிக்கும் தயாரிக்கும் தொழிற்சாலையின் மின்சாதன அறைகளில் வெள்ளநீர் புகுந்துவிட்டதால் இரசாயனப்பொருட்களை குளிர்நிலையில் வைத்திருக்கும் இயந்திரங்களை வேலை செய்யவில்லை என்பதனால் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளநீரை வெளியேற்றி விட்டு மாற்று ஏற்பாடுகள் மூலம் மின்சாதனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு, டெக்சாஸ் மாகாணத்தினை தாக்கியுள்ள மேற்குறித்த இந்த ஹார்வி புயல் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)