அமெரிக்காவில் ஏற்படுத்திய ஹார்வே புயல் காரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாளில் மாத்திரம் சுமார் 125. செ.மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏராளமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்துள்ளனர்.
மேலும், டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பலரும் இப்புயலின் காரணமாக உயிரிழந்தனர்.
இதேவேளை டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கி மூன்றுவாரம் நிறைவடைந்துள்ள நிலையில் இப் புயலுக்கு 82 பேர் பலியாகி உள்ளதாக டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அபாட் தெரிவித்துள்ளார்.