‘ஹிதுமதே ஜீவிதே’ மீண்டும் விளக்கமறியலில்…

தனது தங்கையினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தவர்களை கொலை செய்த ‘ஹிதுமதே ஜீவிதே’ என பிரபலமான டீ.வீ. சுமதிபாலவை பொலிசார் மீண்டும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதானது கடந்த 2006ம் ஆண்டு பொல்கஸ்ஓவிட பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் என பிலியந்தல பொலிசார் தெரிவித்துள்ளதோடு, நேற்று(23) நீதிமன்ற முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை பிணையில் எடுக்க எவரும் முன்வராத நிலையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.