ஹிந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையானகீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி பட உலகுக்கும் போய் உள்ளார்.
பிரபல ஹிந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை கதை படமாகிறது.
இதில் அஜய் தேவ்கன் ரகீமாக நடிக்கவுள்ளதுடன், அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். அமித் சர்மா இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “ஹிந்தி படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. நான் சவாலான வேடங்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். இந்தி படமும் அப்படித்தான் இருக்கும். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதியை இந்த படம் பேசும்” என்றார்.
போனிகபூர் சிபாரிசின் பேரிலேயே கீர்த்தி சுரேசுக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது