ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி இலங்கையில் அறிமுகம்..

சுகாதார அமைச்சில் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு ஹியுமன் பப்பிலோமா (Human Papilloma virus vaccine) என்ற வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று(03) இடம்பெறவுள்ளது.

இலங்கையில் நுண்காம்புக்கட்டி புற்றுநோயை தடுப்பதற்காக குறித்த இந்த தடுப்பூசியை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் நடுத்தர வயதுடைய பெண்கள் மத்தியில் சுமார் 1000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாக வைத்தியசாலை புள்ளி விபரங்களில் இருந்து தெரிய வருகிறது.

உலகம் முழுவதிலும் இந்த புற்றுநோயை தடுப்பதற்காக இரண்டு நடைமுறைகள் முன்ணெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
(rizmira)