ஹியூகோவின் கனவு கலைந்தது

ஹியூகோ சாவேசின் கனவு கலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தசாப்த காலமாக வெனிசுலாவின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த சோசலிச கட்சி இம்முறை தேர்தலில் படுதோல்வியைடைந்துள்ளது.

மிக நீண்ட காலத்தின் பின்னர் அந்நாட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. வெனிசுலாவின் எதிர்க்கட்சி இதுவரையில் 99 ஆசனங்களை வென்றுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஆட்சி அமைத்த சோசலிச கட்சியின் ஆசன எண்ணிக்கை 46 ஆக குறைவடைந்துள்ளது. இன்னமும் 22 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனினும், இப்போதைக்கு எதிர்க்கட்சி பெரும்பான்மை பலத்தைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது.

1999ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அமரர் ஹியூகோ சாவேஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட இடதுசாரி முன்னணி அடைந்த மிகப் பெரிய தோல்வியாக இது கருதப்படுகின்றது. ஹியூகோ சாவேசின் மரணத்தினைத் தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்த நிகலோஸ் மதுவோர , இந்த தோல்விக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் தேர்தல் வெற்றியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.