(FASTNEWS | COLOMBO) – தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கிய சம்பவம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சிலவற்றுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 21ம் திகதி, ஹிருணிகாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கியமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 09 பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.