பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்துள்ள வழக்கானது எதிர்வரும் மார்ச் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11) உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.