1994 ஆம் ஆண்டு வெளியான “ஊர்வசி ஊர்வசி டேக் ஈட் ஈஸி ஊர்வசி” என்ற பாடல் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் வரிகள் மாற்றியமைக்கப்பட்ட ‘டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலின் புதிய வடிவம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை, டேக் இட் ஈசி ஊர்வசி பாடலை ரஹ்மானுடன், ஊர்வசி பாடலின் முதல் பதிப்பில் பாடிய பாடகர் சுரேஷ் பீட்டருடன் இணைந்து பாடினார்.
மாற்றியமைக்கப்பட்ட பாடல் வரியில் ‘ஹிலாரி கிளிண்டன் தோத்து போனால் டேக் இட் ஈசி பாலிசி’ ‘டொனால்ட் ட்ரம்ப்பு பிரசிடெண்ட் ஆனால் டேக் இட் ஈசி பாலிசி’, ‘500 ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி பாலிசி’,’1000 ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி பாலிசி’ போன்ற சம கால நிகழ்வுகள் பாடல் வரிகளாக இடப்பெற்றுள்ளது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.