மாதம்பை – சுதவெல்ல பகுதியில் 3g 170mg ஹெரோயினுடன் ஜொர்ஜ் பிரியந்த குமார என்ற ‘குடு ரஜா’ கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் போதைப்பொருள் விற்பனை மற்றும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
27 வயதான, சுதுவெல்ல பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர் வெளி மாவட்டங்களில் இருந்து போதைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளமை காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.