06 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் “தொட்டலங்க டிகி அக்கா” கைது செய்யட்டுள்ளதாக கொழும்பு குற்றப்புலாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட 52 கிராம் 295 மில்லிகிராம் நிறையைக் கொண்ட ஹெரோயின், தொட்டலங்க களு அக்காவினுடையது என்றும், களு அக்கா, போதைப்பொருளை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சிறைச்சாலையில் உள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, மாளிகாகந்த நீதிமன்றத்தில், டிகி அக்காவை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது